Type Here to Get Search Results !

Tamilnadu Govt jobs in 2021 || +2 மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! வேளாண்மை & வணிகம் படித்த மாணவர்களும் இனி என்ஜினியரிங் படிக்கலாம் || TN JOBS CORNER

 +2 மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! வேளாண்மை & வணிகம் படித்த மாணவர்களும் இனி என்ஜினியரிங் படிக்கலாம்!!!


புதிய அறிவிப்பு!!

இனி வேளாண்மை & வணிகம் படித்த மாணவர்களும் இனி என்ஜினியரிங் படிக்கலாம்!!!

12ம் வகுப்பில், கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் தான் பி.இ. பி.டெக் படிக்கும் நிலை இருந்தது.


AICTE வெளியிட்ட புதிய அறிக்கையில், இனி 12 வில் வேளாண்மை மற்றும் வணிகம் படித்த மாணவர்களும் பொறியியல் படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் இல்லாத படிப்புகளை 12 ஆம் வகுப்பில் எடுப்பவர்கள் பொறியியல் படிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. இதனால் வெகு நாட்களாக கணிதம் இல்லாத பாடங்களை படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்தியாவின் தொழில்நுட்ப கல்விக்கான சட்ட ரீதியான அமைப்பானது (ஏ.ஐ.சி.டி.ஐ அல்லது தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்) இப்போது வரும் 2021- 2022 கல்வி ஆண்டிற்கான பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் தற்சமயம் பல்வேறு பாடங்களையும் இதற்கு தகுதி பாடங்களாக ஆக்கியுள்ளது.


இளங்கலை பொறியியல் படிப்பதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்போது ஏ.ஐ.சி.டி.இ ஆனது 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டிற்கான செயல்முறை கையேட்டை வெளியிட்டுள்ளது. இந்த கையேட்டில் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தகுதியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பொறியியல் கீழ்க்காணும் பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இயற்பியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • எலக்ட்ரானிக்ஸ்
  • தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி)
  • உயிரியல்
  • தகவல் நடைமுறைகள் (informative practices)
  • பயோடெக்னாலஜி
  • தொழில்நுட்ப பாடங்கள்
  • வேளாண்மை
  • பொறியியல் இயற்பியல்
  • வணிக ஆய்வுகள்
  • தொழில் முனைவோர்

மேலே குறிப்பிடப்பட்ட பாடங்களில் மாணவர்கள் பொதுப்பிரிவினர் 45 சதவீதம் மதிப்பெண்களும் இடஒதுக்கீடு பெற்றவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களும் பெற வேண்டும்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள www.tnpsctamilan2.tech இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad